சூர்யாவிற்கு வில்லனாகிய பாஜக முன்னாள் எம்பி.! வெளியான அதிரடி அறிவிப்பு.!  - Seithipunal
Seithipunal


என் ஜி கே மற்றும் காப்பான் வரிசையில் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று என்ற திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடித்து வருகிறார். அவருக்கு இணையாக அபர்ணா பாலமுரளி நடித்து வருகின்றார். 

இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி ஆர் கோபிநாத்தின் வாழ்க்கையை தான் மையப்படுத்தி இந்தப் படம் உருவாகவிருக்கிறது. சென்னை உள்ளிட்ட இடங்களில் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று முடிந்தது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரமாக தெலுங்கு நடிகர் மோகன்பாபு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக படக்குழு அறிவித்தது.

இந்த நிலையில், தற்போது சூழலைப் பற்றிய படத்தில் பாஜக முன்னாள் எம்பியும் நடிகருமான பரேஷ் ராவல், நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக சில தகவல்கள் வெளியாகின்றது. மேலும், அவர் வில்லன் கதாபாத்திரத்திலும், விமான நிலையத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் நடிக்க இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது.

தமிழ் திரையுலகில் பரேஷ் ராவல் சூரரைப் போற்று படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார். இவர் பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp mp attack surya


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->