திடீரென முதலமைச்சரை சந்தித்த எதிர்க்கட்சி எம்எல்ஏ.. நடந்த பேச்சுவார்த்தை.. அதிர்ச்சியில் எதிர்கட்சித் தலைவர்..! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசத்தில் முதலமைச்சர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 சட்டமன்ற உறுப்பினர்களில் கமல்நாத் அரசுக்கு 120 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளனர். 

அதில் 114 பேர் காங்கிரசை சேர்ந்தவர்கள். மற்றவர்கள் பகுஜன் சமாஜ் , சமாஜ்வாடி மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. சில நாட்களாக கமல் நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து விடும் என பேசப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் பாஜக எம்எல்ஏ நாராயன் திரிபாதி கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல் அமைச்சர் கமல்நாத்தை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. முதலமைச்சரை சந்தித்து தொடர்பாக பாஜக எம்எல்ஏ நாராயன் திரிபாதி நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியவை, முதலமைச்சரை சில நிமிடங்கள் சந்தித்து பேசினேன். அப்போது சட்னா மாவட்டத்திலுள்ள மைஹாரை புதிய மாவட்டமாக உருவாக்க தொடர்பாக பேசினேன். இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் இதனை நிறைவேற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று மைஹாரை மாவட்டமாக உருவாக்க கமல்நாத் ஒப்புக் கொண்டார் என தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp mla meet kamal nath


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->