மற்ற கட்சிகளை வாய்பிளக்க வைக்கும் பாஜகவின் அறிவிப்பு!  - Seithipunal
Seithipunal


பாஜக செயல் தலைவராக, இமாச்சலப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஜே.பி. நட்டா பதவியேற்ற பின், முதல்முறையாக அவரது சொந்த மாநிலத்துக்கு சென்றார்.

இன்று அம்மாநிலத்தில் பிலாஸ்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஜே.பி. நட்டா பங்கேற்றார். அங்கு பேசிய நட்டா, நாட்டிலேயே வலிமையான கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. பாஜகவின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 17.50 கோடியாக அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார். 

கடந்த 54 நாட்களில் பாஜகவில் 6 கோடி புதிய உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஒட்டுமொத்தமாக பாஜகவின் உறுப்பினர்கள் பலம் 17.50 கோடியாக உயர்ந்து, பாஜக வலிமையான கட்சியாக  உருவெடுத்துள்ளது என பெருமையாகக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜூன், ஜூலையில் புதிய உறுப்பினர் சேர்க்கை தொடங்கியதில் இருந்து 54 நாட்களில் 11 கோடி இருந்த உறுப்பினர்கள் எண்ணிக்கை ஆனது தற்போது 17.50 கோடியாக அதிகரித்துள்ளது என தெரிவித்துளளார். 

உறுப்பினர் சேர்க்கை, மிஸ்டு கால் கொடுத்து இணைத்ததை விட, தற்போது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP members count increase 6 crores within two months


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->