#சற்றுமுன் வெளியான தேர்தல் முன்னிலை.! கொண்டாட்டத்தில் பாஜக தொண்டர்கள்.!  - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத் மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 1ம் தேதி நடைபெற்றது. 

150 வார்டுகளை கொண்ட இந்த தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, காங்கிரஸ், பாஜக, அசாதுதீன் ஓவைசியின் அனைத்திந்திய மஜ்லிஸ்  இ  இத்திஹாதுல் முஸ்லிமீன் (எஐஎம்ஐஎம்) உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. 

இந்நிலையில், ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த தேர்தலில் ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்ற ஆளுங்கட்சியான தெலுங்கானா ராஷ்டிர சமிதிக்கும், பாஜகவுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுவதாக தெரிகிறது.
 
இந்நிலையில், தெலங்கானா : ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் அதிக தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றுள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது .

தெலங்கானாவில் ஆளும் கட்சியாக உள்ள தெலங்கானா ராஷ்டீரிய சமிதி 2 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp leading in hyderabad election


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->