பசும்பொன்னில், பாஜக தலைவர் முருகனுக்கு ஏற்பட்ட தர்மசங்கடம்!  - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 113-வது பிறந்தநாள் மற்றும் 58-வது குருபூஜையையொட்டி, தேவர் குருபூஜை விழா நடைபெற்றது. இந்த விழாவில் அதிமுக தரப்பில் ஈபிஎஸ், ஓபிஎஸ், திமுக தரப்பில் ஸ்டாலின், அமமுக தரப்பில் தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

பாஜக சார்பிலும் அஞ்சலி செலுத்த எச்.ராஜா, நயினார் நாகேந்திரன், எல் முருகன் சென்றனர். அஞ்சலி செலுத்திய தலைவர்களுக்கு, தேவர் நினைவிடத்தின் நிர்வாகிகள் துண்டு, மாலை அணிவித்து மரியாதை செய்வது வழக்கம். அதன்படி முன்னதாக சென்ற எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலின், தினகரனுக்கு மரியாதை செய்தார்கள்.

பாஜகவில் மூன்று பேர் சென்ற நிலையில் முருகன், எச்.ராஜா, நயினார் நாகேந்திரன் மூவரில் யாருக்கு நன்றி மரியாதை செய்வது என்று குழப்பம் உண்டானது. அப்போது மூத்த தலைவர் என்ற அடிப்படையில் எச்.ராஜாவிற்கு மரியாதை செய்யப்பட்டது. இதனை பார்த்த பாஜக தலைவரான எல்.முருகன் தர்மசங்கடமான சூழ்நிலையில் உடனே அங்கிருந்து வெளியேற முயன்றார். உடனடியாக நயினார் நாகேந்திரன் பூசாரியிடம் சொல்லி, எல்.முருகன் கழுத்தில் துண்டு போட்டு மரியாதை செய்தார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Leaders in Pasumpon


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->