மானம், மரியாதை இருந்தா இதை செய்யுங்கள்.! முதல்வருக்கு விடுக்கப்பட்ட சவால்.!  - Seithipunal
Seithipunal


பாஜகவின் மூத்த தலைவரான அசோக், பெங்களூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது அவர், "முதலமைச்சர் குமாரசாமி தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையை இழந்து விட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பு தயார் என முதலமைச்சர் குமாரசாமி அறிவித்திருந்தார். அப்படியிருந்தும் ஏன் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் சட்டமன்றத்தில் தேவை இல்லாத விவாதங்கள் நடத்தி காலதாமதம் செய்கிறார்.

bjp, seithipunal

நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தாமல், பாஜக மீது தேவையற்ற குற்றச்சாட்டுகளை கூறி சட்டசபையில் குமாரசாமியும், காங்கிரஸ் தலைவர்களும் பேசி வருகின்றனர். மேலும், கவர்னர் வஜூபாய் வாலா தான் முதலமைச்சர் குமாரசாமிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். தற்போது பெரும்பான்மையை நிரூபித்துக்காட்ட வேண்டும் என கவர்னர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மானம், மரியாதை என ஒன்று இருக்குமாயின் முதலமைச்சர் குமாரசாமி சட்டமன்றத்தில் தேவையற்ற விஷயங்களை பேசுவதை நிறுத்திவிட்டு பெரும்பான்மையை நிரூபித்துக்காட்ட முயற்சிக்க வேண்டும். மேலும், பாஜகவினர் 5 கோடி கொடுத்தாக சீனிவாச கவுடா எம்எல்ஏ சட்டசபையில் குற்றம் சாட்டியுள்ளார். 

kumarasamy, seithipunal

இது தொடர்பாக ஊழல் தடுப்பு வழக்கு பதிவாகி இருக்கின்றது. சீனிவாச கவுடா எம்எல்ஏவை ஊழல் தடுப்பு காவல் துறையினர் ஆஜராகும்படி பலமுறை நோட்டீஸ் அனுப்பி வைக்கின்றனர். அவர்கள் குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும் பட்சத்தில், எதற்காக ஓடி ஒளிய வேண்டும்.? போலீசுக்கு பதிலளிக்காமல் விசாரணைக்கு ஆஜராக மறுப்பது ஏன்.? இதுபற்றி அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும்." என அவர் கூறியுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp leader speech in banglore


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->