வரும் சட்டமன்ற தேர்தலில் 3 -வது அணி அமைப்பது குறித்து பாஜக தலைவர் பரபரப்பு பேட்டி.!! - Seithipunal
Seithipunal


சென்னை கமலாலயத்தில் தமிழக பாஜக தலைவர் எல் முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழக பாஜக சார்பில் வருகின்ற 6 ஆம் தேதி காலை 10 மணி அளவில் திருத்தணியில் இருந்து வேல் யாத்திரையைத் தொடங்க உள்ளது.

இந்த யாத்திரையை முருகனின் அறுபடை வீடுகள் உட்பட தமிழகம் முழுவதும் செல்லவுள்ளது. இறுதியாக டிசம்பர் 6 ஆம் தேதி திருச்செந்தூரில் யாத்திரை நிறைவு பெறுகிறது. இந்த யாத்திரையில் பாஜக தேசிய நிர்வாகிகள், மத்திய அமைச்சர்கள், சில மாநிலங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்கவுள்ளன.ர் நிறைவு நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கலந்து கொள்ளவுள்ளார். 

யாத்திரையின் நோக்கம் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள மத்திய அரசின் திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதாகும்.  இந்த யாத்திரை தமிழகத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும். ரஜினிகாந்த் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த பாஜக தலைவர், ரஜினிகாந்த் மிகப்பெரிய ஆன்மீகவாதி. தேசிய சிந்தனை உடையவர், அவர் அரசியலுக்கு வருவது பாஜக எப்போதும் வரவேற்கிறது. 

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நல்ல ஆட்சியை வழங்கி வருகிறார். எளிமையாகவும், மக்கள் எளிதில் அணுகக்கூடிய முதலமைச்சராகவும் இருக்கிறார். வரும் சட்டமன்ற தேர்தலில் 3 வது அணி குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, தமிழ்நாட்டில் தற்போதைய சூழ்நிலையில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பில்லை என கூறினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp leader l murugan press meet about 3rd team for election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->