புது திருப்பம்., அமமுக-க்கு கூட்டணி அழைப்பு.! அதிரடி பேட்டி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக தங்களது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அதே சமயத்தில் தேர்தல் ஆணையமும் அதற்கான முன்னேற்பாடுகளை முடுக்கிவிட்டு உள்ளன.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் திமுக தலைமையில் ஏற்பட்ட அதே கூட்டணி வரும் சட்டமன்ற தேர்தலிலும் தொடருமா என்பது பெரும் சந்தேகத்துக்கு உள்ளாகியுள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணியிலும், திமுக கூட்டணியிலும் சரி பல்வேறு கூட்டணி கட்சிகள் இடம் மாறவும், மூன்றாவது அணியை அமைக்கவும் திட்டமிட்டு வருகின்றன.

இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழுத்துடன் பாஜக கூட்டணி அமைப்பது குறித்து பாஜக தலைமை முடிவு செய்யும் என்று பாஜகவின் தமிழ்நாடு மாநில தலைவர் எல் முருகன் பேட்டியளித்துள்ளார்.

நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், "சசிகலா- அ.தி.மு.க. இடையேயான விவகாரம் அவர்களது உள்கட்சி விவகாரம். வரும் தேர்தலில் அமமுக தனித்துப் போட்டியிடுவோம் என்று எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை.

அதே சமயத்தில் எங்கள் கூட்டணியில் அமமுக இடம் பெறுவது குறித்து பாஜக தலைமை தான் முடிவு செய்யும்." என தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp l murugan say about ammk


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->