விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு - எல்.முருகன் உறுதி.. உற்சாகத்தில் கமலாலயம்.! - Seithipunal
Seithipunal


பேச்சுவார்த்தை நடத்தி தொகுதிகள் தொடர்பான இறுதி முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல்.முருகன் சென்னை தியாகராஜா நகரில் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்தை கோவையில் தொடங்கினர். இதனைத்தொடர்ந்து பல தேசிய தலைவர்கள், தேசிய நிர்வாகிகள் தமிழகத்திற்கு வரவுள்ளனர். 

தமிழக சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராக உள்ளது. இன்று காலை தேசிய பொதுச்செயலாளர் மற்றும் தமிழக தேர்தல் பொறுப்பாளர் கிருஷ்ணன் ரெட்டி மற்றும் வி.கே.சிங் மற்றும் நான் (எல்.முருகன்) தமிழக முதல்வரை எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியுள்ளோம். கூட்டணி தொகுதி இடப்பங்கீடு முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும். 

இரட்டை இலக்க எண்ணிக்கையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் இருப்பார்கள். பேச்சுவார்த்தை நடத்தி இறுதி முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும். அனைவரும் காத்திருங்கள். அதிமுக கூட்டணியில் தான் பாஜக உள்ளது " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP L Murugan Pressmeet about Final Stage of Consultancy ADMK and BJP


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->