அதிமுக உடனான தொகுதி பங்கீடு குறித்து பாஜக தலைவர்கள் அடுத்தடுத்து பேட்டி.!! - Seithipunal
Seithipunal


சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மாநில நிர்வாகிகளுடன் பாஜக தேர்தல் பார்வையாளர் கிஷன் ரெட்டி, சிடி ரவி, சுதாகர் ரெட்டி, மாநிலத் தலைவர் எல் முருகன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர், இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சி போட்டியிடும் தொகுதிகள் எவை என்று இன்னும் முடிவு செய்ய முடியாத நிலையில் இருப்பதால், கட்சி தலைமை எடுக்கும் முடிவை அனைவரும் ஏற்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மாநில தலைவர் முருகன், அதிமுகவுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். திமுக எந்த காலத்திலும் ஆட்சிக்கு வராது. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நிலம் அபகரிக்கும் வேலையை திமுக செய்யும் என்பதை மக்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். எனவே அந்த வாய்ப்பை திமுகவிற்கு பொதுமக்கள் கொடுக்க மாட்டார்கள். திமுக தோல்வி என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று. 

தொகுதி பங்கீடு குறித்து சி டி ரவி  கூறியபோது, அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நல்ல முறையில் உள்ளது. நாங்கள் அதிமுக கூட்டணி இருக்கிறோம். அதிமுக தலைவர்கள் விவரம் அறிந்தவர்கள். யாரை சேர்க்க வேண்டும், யாரை விலக்க வேண்டும் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும். அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp l murugan and cd ravi press meet


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->