அதிமுகவின் பிளவு பட்டதற்கு பாஜக தான் காரணம்.. அமமுக டிடிவி தினகரன்.! - Seithipunal
Seithipunal


அதிமுகவில் கடந்த சில நாட்களாக உட்கட்சி பூசல் நிலவி வரும் நிலையில், ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி என தனித் தனியாக இரு அணிகளாக அதிமுக பிளவுப்பட்டுள்ளது‌.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா உயிரிழந்தை தொடர்ந்து இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் போட்டியிட பல்வேறு அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன.

இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக இ வி கே எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதேபோல் தேமுதிக மற்றும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது.

இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக கட்சியில் இபிஎஸ் - ஓபிஎஸ் தனித்து போட்டியிடுகின்றனர். இருவரும் ஒரே சின்னத்தில் போட்டியிட்டால் இரட்டை இலை முடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கடியாப்பட்டியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் பதவி ஆசைக்காக இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர். இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இதற்கு முன்பு தான் வேட்பாளராக நின்ற போது நடந்ததை போல் தற்போதும் நீதிமன்றம் இரட்டை இலை சின்னத்தை முடக்குவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், அதிமுக பிளவுபட்டதற்கு பாஜக தலைமை தான் காரணம் என தெரிவித்துள்ளார். அதிமுக மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்றால் அது பாஜக நினைத்தால் மட்டுமே முடியும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP is responsible for the split of AIADMK AAMUK TTV Dinakaran


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->