கோவை பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசிய அருணுக்கு  நிதியுதவி வழங்கிய பாஜக.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பெரியாரின் சிலை உடைக்கப்படுவதும், அவமதிக்கப்படுவதும் கடந்த சில காலமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் அமைந்துள்ள பெரியாரின் சிலைக்கு இரவு நேரத்தில் காவி வண்ண சாயம் ஊற்றப்பட்டது. அதேபோல திருக்கோவிலூர், திருவள்ளூரிலும் பெரியார் சிலைகள் அவமதிக்கபட்டு வந்தது. மேலும், புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலைக்கும் கன்னியாகுமரியில் பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கும் காவி துணிகள் அணியப்பட்டது திராவிட கட்சிகளிடையே சலசலப்பை உருவாக்கியது.

கடந்த சில நாட்களாக கந்த சஷ்டி கவசம் தொடர்பாக ஆபாசமாக விமர்சனம் செய்த பெரியாரிய உணர்வாளர்களுக்கும், இந்து மத மக்களுக்கும் இடையே கருத்து மோதல்கள் நீடித்து வந்தவண்ணம் உள்ளது. இதே சமயத்தில் பெரியார் சிலை அவமதிக்கபடுவது சலசலப்பை உண்டாக்கியுள்ளது.

இந்த நிலையில், கோவையை சேர்ந்த அருண் பெரியார் சிலைக்கு காவி சாயம் ஊற்றிய வழக்கில் சரண்டர் ஆனார். இதை ஊக்குவிக்கும் விதமாக அவர் குடும்பத்திற்கு தகவல் தொழில் நுட்ப அணி சார்பாக 50 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது.

இந்த தகவலை அந்த அணியின் தலைவர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp give fund to kovai arun


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->