பாஜகவிலிருந்து பதவி விலகிய பொதுச்செயலாளர்.! அடுத்தடுத்து 4 நிர்வாகிகள் விலகியதால், அதிர்ச்சியில் பாஜக தலைமை.! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பயங்கரவாதிகள் அங்குள்ள பாரதிய ஜனதா கட்சி தலைவர்களை தொடர்ந்து கொலை செய்து வருகின்றனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புத்காம் மாவட்டம் பாஜக தலைவர் அப்துல் அமீது நஜார் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

மொஹிந்த்போரா பகுதியில் வசித்து வரும் அப்துல், மாவட்ட பாஜக இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில், இன்று காலை நேரத்தில் இவர் மீது பயங்கரவாதிகள் திடீரென சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். 

இதனால் படுகாயம் அடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சமீப காலமாகவே ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த நபர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி வரும் சம்பவம் அதிகரித்து இருக்கிறது.

இதனிடையே, தீவிரவாதிகள் த்காம் மாவட்டம் பாஜக தலைவரை தாக்கிய சம்பவம் நடந்த அடுத்த சில மணி நேரத்தில் பட்கம் மாவட்ட பா.ஜ.க.வின் பொதுசெயலாளர் உள்ளிட்ட நான்கு நிர்வாகிகள் பாஜகவில் இருந்து விலகினர். 

நிர்வாகிகள் பதவி விலகல் குறித்து கருத்து தெரிவித்த ஜம்மு-காஷ்மீர் பா.ஜ.க. தலைவர் ரவீந்தர் ரெய்னா, காஷ்மீர் பள்ளத்தாக்கில் பா.ஜ.க. தொண்டர்கள் மீது அதிகரித்து வரும் தாக்குதல்கள் பாகிஸ்தானின் விரக்தியை காட்டிகிறது. இது போன்ற தாக்குதல்களால் காஷ்மீர் பாஜக எந்த விதத்திலும் பாதிக்கப்படாது. இது போன்ற கோழைத்தனமான செயல்களால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாஜக மேலும் மேலும் பிரபலமடைவதை பாகிஸ்தானால் தடுக்க முடியாது என்றார்.

மேலும், தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடங்களை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். காஷ்மீரை தீவிரவாதத்திலிருந்து முழுமையாக விடுவிப்போம். தேசிய மற்றும் பாஜகவின் கொடி காஷ்மீர் பள்ளத்தாக்கின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் சென்றடைந்துள்ளது. இது பாகிஸ்தானுக்கு விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் தான் பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஏவி விட்டு பா.ஜ.க. தொண்டர்களை தாக்க தொடங்கியுள்ளது. இனி தான் நாங்கள் எங்கள் நடவடிக்கைகளை தீவிரபடுத்துவோம், ஒவ்வொரு வீட்டிலும் தேசிய மற்றும் பாஜக கொடியை ஏற்றுவோம். என அவர் தெரிவித்தார்.

பொதுச்செயலாளர் உள்ளிட்ட 4 நிர்வாகிகள் அடுத்தடுத்து பதவி விலகியது, காஷ்மீர் பாஜக தலைமையை அதிர்ச்சியடைய செய்திருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp district general secretary resign his posting


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->