#Breaking: அதிமுக தான் தமிழகத்தின் பெரும்பான்மை கட்சி.. பாஜக சி.டி ரவி பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும் மே மாதத்தில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதிமுக கூட்டணி கட்சிகளின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளது. ஆனால், அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, பாஜகவின் தேசிய தலைமை தான் தமிழக முதல்வரை தேர்வு செய்யும் என சர்ச்சை கருத்து தெரிவித்து வந்தது.

இந்நிலையில், திருச்சியில் வைத்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய பொதுச்செயலாளர் மற்றும் தமிழக பொறுப்பாளர் சி.டி ரவி, " தமிழகத்தில் பாஜகவிற்கு மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளது. தமிழக மக்களின் நலனில் பாஜக அக்கறை செலுத்தியுள்ளது. பிரதமர் மோடியும் தமிழகத்திற்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். 

தமிழகத்தில் அதிமுக தான் பெரிய கட்சி, பெரும்பான்மை கட்சி. தமிழகத்தில் உள்ள கூட்டணியளவில் அதிமுகவே பெரிய கட்சி. கூட்டணி முதல்வர் வேட்பாளரை அதிமுக தான் தீர்மானம் செய்யும். தமிழகத்தில் முதலமைச்சர் வேட்பாளரை அதிமுக தீர்மானம் செய்யும் " என்று தெரிவித்துள்ளார். 

அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக கட்சியிடையே தமிழக முதல்வர் வேட்பாளர் தொடர்பாக பல சர்ச்சை கருத்துக்கள் பேசப்பட்டு வந்த நிலையில், சி.டி ரவியின் அறிவிப்பு அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு தொடர்பான பாஜகவின் சர்ச்சை பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP CT Ravi Pressmeet about ADMK Tamilnadu CM Candidate 11 Jan 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->