ஈரோடு கிழக்கில் பண பட்டுவாடா... திமுக, காங்கிரஸ் மீது தேர்தல் அதிகாரியிடம் பாஜக புகார்...!! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். திமுக ஆட்சி பொறுப்பேற்று 20 மாதங்களுக்கு மேல் ஆகியுள்ளதால் மக்களின் ஆதரவை தங்களுக்கு இருப்பதாக நிரூபிக்கும் கட்டாயத்தில் திமுக உள்ளது.

இதனால் ஆட்சி பலம், அதிகார பலம், பண பலம் மூலம் எல்லா வகையிலும் வெற்றி பெற திமுக முயலும் என பாஜக குற்றம் சாட்டி வருகிறது.

இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மற்றும் திமுக அமைச்சர் கே.என் நேரு ஈரோடு கிழக்கு இடை தேர்தலில் பண பட்டுவாடா குறித்து பேசியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். 

அதற்கு திமுக அமைச்சர் எ.வ வேலு போலி வீடியோ எனவும் அமைச்சர் கே.என் நேரு பணப்பட்டுவாடா குறித்து பேசவில்லை எனவும் மறுப்பு தெரிவித்திருந்தார். திமுக அமைச்சர் வீடியோ போலீ என நிரூபித்தால் அரசியலையும் விட்டு விளக்க தயார் என அண்ணாமலை சவால் விடுத்தார்.

இந்த நிலையில் பாஜக நிர்வாகிகள் அடங்கிய குழு தலைமைச் செயலகத்தில் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பண பட்டுவாடா செய்ய முயற்சிப்பதாக புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக தமிழக பாஜக துணை தலைவர் நாராயண திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP complains on DMK Congress Cash distribution in Erode East


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->