தமிழகத்தின் பாஜக வேட்பாளர்கள்! இது ஹெச் ராஜா அறிவிப்பு இல்லை! அதிகாரபூர்வ அறிவிப்பு! யாருக்கெல்லாம் வாய்ப்பு!  - Seithipunal
Seithipunal


பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள் தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அக்கட்சியின் மூத்த தலைவர் தேர்தல் கமிட்டி உறுப்பினர் ஜேபி நட்டா  வேட்பாளர்கள் போட்டியிடும்  தொகுதி பட்டியலை அறிவித்து வருகிறார். 

அதன்படி கன்னியாகுமரி தொகுதியில், நாடாளுமன்ற உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் இருக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். அதேபோல எதிர்பார்க்கப்பட்டது போலவே தூத்துக்குடி தொகுதியில், திமுக சார்பில் களமிறங்கி இருக்கும் கனிமொழியை எதிர்த்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் களமிறங்குகிறார். 

அதற்கடுத்தபடியாக ராமநாதபுரம் தொகுதியில் அதிமுகவில் இருந்து பாஜகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் பாஜக சார்பாக போட்டியிடுகிறார். சிவகங்கை தொகுதியில் ஹெச் ராஜா போட்டியிடுகிறார். கோயம்புத்தூர் தொகுதியில் பாஜகவை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.

இந்த பட்டியல் ஏற்கனவே பார்த்தது போலவே இருக்கிறதா, ஆம் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா நேற்று அவசரப்பட்டு  வெளியிட்டரே..  அதே பட்டியல் தான் எவ்வித மாற்றமும் இல்லாமல் வந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp candidate for tamilnadu constituency


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->