பாஜக போட்டியிட போகும் தொகுதிகள் எவை., எவை.? வெளியான உத்தேச பட்டியல்.! - Seithipunal
Seithipunal


நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தற்போது கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. 

அதிமுக தலைமையிலான கூட்டணியில், பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் ஆகி உள்ளது. இந்த 23 தொகுதிகள் எவை எவை என்பது குறித்தும் அதிமுக-பாமக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதற்கிடையே, நேற்று அதிமுக பாஜக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் ஆகியுள்ளது. அதன்படி, அனைத்திந்திய திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி, பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழ்நாட்டில் 20 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளருக்கு, அதிமுக தனது முழு ஆதரவு அளிக்க உள்ளதாக ஒப்பந்தம் போட்டுள்ளது.

இந்நிலையில், கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மேலும், பாஜக போட்டியிட விருப்பம் உள்ள தொகுதிகளின் உத்தேச பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி,

மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, கிருஷ்ணகிரி, 
தர்மபுரி, கே வி குப்பம், சேலம், ஆத்தூர், திருப்பூர்,
ராசிபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஓசூர், 
வேலூர், சூலூர், கரூர், அரவக்குறிச்சி, விருதுநகர், 
ராஜபாளையம், சிவகாசி, ஈரோடு, திருவள்ளூர், 
கோவை தெற்கு, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி,
மயிலாப்பூர், துறைமுகம், கொளத்தூர், பவானி, 
திருத்தணி, ஸ்ரீபெரும்புதூர், நாமக்கல்,


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP assembly may be list


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->