முதல்வர் ஸ்டாலின் மாதம் ஒருவரை உயிரிழக்க வைக்க இலக்கு வைத்துள்ளாரா? - நேரடியாகவே கேள்வி கேட்ட பிரபலம்.!  - Seithipunal
Seithipunal


இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டர் பதிவு மூலம் முதல்வர் ஸ்டாலினுக்கு நேரடியாக கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.

அவரின் அந்த பதிவில், "தமிழகத்தில் மாதம் குறைந்தபட்சம் ஒருவராவது காவல்துறையினரின் அடக்குமுறை காரணமாக உயிரிழக்க வேண்டும் என்று, இந்த அரசு இலக்கு ஏதும் வைத்துள்ளதா? 

 

இன்று பிரபாகரன் அவர்களது குடும்பம் சிதைந்து கிடக்கிறது. வழக்கம் போல் சம்பந்தப்பட்ட காவல்துறையினருக்கு இடைநீக்கம் மற்றும் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு என்று கடந்து செல்வது மட்டும் அரசின் வேலை இல்லை.

காவல்துறை உங்கள் எதிரி என்று மாறுவதற்கு முன், காவல்துறையின் பிரச்சனைகளைப் புரிந்து கொண்டு அதற்கு தீர்வு காண ஒரு ஆணையம் அமைத்து அதன் பரிந்துரைகளை உடனடியாக செயல்படுத்துங்கள் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களே" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

வழக்கின் விவரம்: 

சேலம் மாவட்டம் கருப்பூர் பகுதியை சேர்ந்த சேர்ந்தவர் பிரபாகரன். மாற்றுத்திறனாளியான இவரும் இவருடைய மனைவி ஹம்சலா ஆகிய இருவரையும் ஒரு திருட்டு வழக்கில் சேந்தமங்கலம் காவல் நிலைய போலீஸார் கடந்த 10ஆம் தேதி கைது செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து கடந்த 11ஆம் தேதி பிரபாகரன் நாமக்கல் சிறையிலும், ஹம்சலா சேலம் மத்திய சிறைச்சாலையிலும் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், திடீரென பிரபாகரனின் உடல் நிலை மோசமானதாகும், இதனால் அவர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர்.

அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பிரபாகரன் சிகிச்சை பலனின்றி அன்று நள்ளிரவு உயிரிழந்தார். 

இதனையறிந்த பிரபாகரனின் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நபர்கள், போலீசார் தாக்கியதால் தான் பிரபாகரன் உயிரிழந்ததாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பிரபாகரன் உயிரிழப்புக்கு காரணமான சேந்தமங்கலம் காவல் நிலைய போலீசார் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், கொலை வழக்குப் பதிவு செய்து, அவர்களை கைது செய்ய வேண்டும் என்று உறவினர்களும், விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்களும் ஆவேசமாக வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், சேந்தமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சந்திரன், பூங்கொடி, தலைமை காவலர் குழந்தைவேல் ஆகிய 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் பிரபாகரனின் மரணத்தை மர்ம மரணம் என்று போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp annamalai say about prabakaran dead issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->