நடிகர் சூர்யாவுக்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை! பரபரப்பு பேட்டி!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நீட் தேர்வு அச்சத்தால் நேற்று ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குறித்து நடிகர் சூர்யா நேற்று ஆவேச அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் அதில், "நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது மனசாட்சியை உலுக்குகிறது. 

சமமான வாய்ப்புகளை உருவாக்கி தரவேண்டிய அரசாங்கம் ஏற்றத்தாழ்வை உருவாக்கும் கல்விமுறையை சட்டமாக கொண்டு வருகிறது. கொரோனா அச்சத்தால் வீடியோ கான்பரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வெழுத உத்தரவிடுகிறது." என்று நடிகர் சூர்யா அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார். நடிகர் சூர்யாவின் இந்த கருத்துக்கு சமூக வலைதளத்தில் ஆதரவு பெருகியது.

நடிகர் சூர்யா மீது நடவடிக்கை கோரி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடிதம் எழுதியுள்ளார். உயிருக்கு பயந்து காணொலியில் நீதிமன்றத்தை நடத்துவதாக கூறும் நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான எஸ்.எம்.சுப்ரமணியம் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில், நடிகர் சூரியாவின் கேள்விக்கான பதில், 'நீட்'  தேர்வின் முடிவுகள் தரும் என்று பா.ஜ., மாநில துணைத் தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, "நீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது துரதிஷ்டவசமானது. தமிழகத்தில் நீட் தேர்வு குறித்து தவறான பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யாவின் நீட் தேர்வு குறித்த கேள்விக்கான பதிலை, நீட் ரிசல்ட் தரும். அதன் பின், தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வார்" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp annamalai reply to surya


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->