மாட்டுவண்டி கட்டி வந்த அண்ணாமலை., கர்நாடக அரசுக்கு கண்டனம்.! - Seithipunal
Seithipunal


மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முயற்சியை கைவிட கோரி, இன்று தஞ்சாவூர், பனகல் பில்டிங் அருகில் பாரதிய ஜனதா கட்சி மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம் நடத்துகிறது.

பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடக்கும் இந்த போராட்டத்தில் பாஜகவை சேர்ந்த பல்வேறு நிர்வாகிகளும் கலந்து கொண்டு உள்ளனர்.

இந்த போராட்டத்தில், மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முயற்சியை கைவிட வேண்டும். தமிழக மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள காவேரி - கோதாவரி இணைப்பு திட்டத்திற்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளித்து விரைந்து திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

காவேரி குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைந்து முடித்திட தமிழக அரசுக்கு வலியுறுத்தல். கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை தமிழக அரசாங்கம் உடனடியாக வழங்க வேண்டும்.

ஆறுகளில் மணல் கொள்ளையை தமிழக அரசு தடுத்திட வேண்டும். நீர் வளத்தை பாதிக்ககூடிய தைல (யூக்லிப்டஸ்) மரங்களை அரசு இடங்களில் உள்ளவற்றை அழித்து நற்பலன் தரக்கூடிய மரங்களை தமிழக அரசு பயிரிட வேண்டும். 

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுத்து விவசாயிகளை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும். உள்ளிட்ட  விவசாயிகள் வாழ்வாதாரத்தை காக்கும் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் பேசிய அண்ணாமலை, மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசை விடமாட்டோம் என்று தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp annamalai protest against karnataka govt


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->