பாஜகவும், காங்கிரசும் ஒன்றாக வலியுறுத்திய விஷயம்.. நெருக்கடியில் மாநில அரசு!! - Seithipunal
Seithipunal


கேரள சபரிமலை அய்யப்பன் கோவிலில், 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த டெல்லி உச்சநீதிமன்றம், அந்த கட்டுப்பாட்டை ரத்து செய்து அனைத்து வயது பெண்களும் கோவிலுக்கு செல்லலாம் என கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி தீர்ப்பளித்தது. 

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த கேரளாவை ஆளும் இடதுசாரி அரசு முடிவு செய்தது. இதையடுத்து கடந்த ஆண்டு அய்யப்பன் கோவிலுக்குள் சில பெண்கள் உள்ளே சென்றனர் இதனால் அங்கு போராட்டங் களும், மோதலும் வெடித்தன.

இதையடுத்து, இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தின் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனு மீதான விசாரணை கடந்த பிப்ரவரி மாதம் முடிவடைந்து, தீர்ப்பு மட்டும் பின்னர் அறிவிக்கப்படும் என தள்ளி வைக்கப்பட்டது.

டெல்லி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், வருகிற 17 ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். எனவே, அதற்கு முன்பாகவே இந்த மீதான மறுஆய்வு மனுக்கள் மீது தீர்ப்பு அளிக்கப்படுகிறது. இதனகிடையே, வருகிற 16 ஆம் தேதி சபரிமலை கோவிலின் நடை திறக்கப்படுகிறது. 

சபரிமலை மறுசீராய்வு மனு மீது நேற்று தீர்ப்பு வழங்குவதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளார். அதன்படி, பெண்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்படுவது சபரிமலையில் மட்டுமல்ல, வேறு கோயில்களிலும், மசூதிகளிலும் உள்ளது என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார். மேலும் சபரிமலை மறுசீராய்வு மனு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இது குறித்து கேரளா மாநில பாஜக மூத்த தலைவர் கும்மணம் ராஜசேகரன் கூறியவை, சபரிமலை கோவிலுக்குள் கேரள அரசு பெண்களை அனுமதிக்கக்கூடாது.

ஒருவேளை, காவல் துறையினர் உதவியுடன் பெண்களை அனுமதிக்க முயற்சித்தால், கடும் விளைவுகள் ஏற்படும் என்று கூறினார். அதுபோல், கேரள எதிர்க்கட்சி (காங்கிரஸ்) தலைவர் ரமேஷ் சென்னிதாலாவும் இதே கோரிக்கையை வைத்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp and congress leader says sabarimalai issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->