வைகோவிற்கு எம்பி சீட்! மதிமுகவை கூட்டணிக்கு அழைத்த பாஜக கூட்டணி கட்சி!
BJP Alliance MDMK Vaiko MP seat
பாராளுமன்ற மேல்சபை மாநிலங்களவையில், திமுகவின் வில்சன், சண்முகம், அப்துல்லா, மதிமுகவின் வைகோ, அதிமுகவின் சந்திரசேகரன் மற்றும் பாமகவின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகிய 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் இன்று முடிவடைந்தது.
இதில், கடந்த 30 ஆண்டுகளாக மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இடம்பிடித்து வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் நாடாளுமன்ற பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார். (திமுக சார்பில் இந்த முறை அவருக்கு மாநிலங்களவையில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. மாறாக கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது)
பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மாநிலங்களவையில் வைகோ உரையாற்றினார். அவருடன் பணியாற்றிய சக எம்.பிக்களுக்கும், மாநிலங்களவைக்கு தன்னை அனுப்பிய முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும், முரசொலி மாறனுக்கும் நன்றி தெரிவித்தார்.
அப்போது, மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, “வைகோ எங்களோடு (பாஜக கூட்டணி) வந்தால், அவருக்கு மீண்டும் எம்.பி பதவி கிடைக்கும்” என நேரடியாகவே கூட்டணி அழைப்பை விடுத்தது உள்ளார்.
மதிமுகவிற்கு பாஜகவுடன் கூட்டணி வைப்பது ஒன்றும் புதிது இல்லை என்றாலும், தற்போது அதற்க்கு வாய்ப்பு இல்லை என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
English Summary
BJP Alliance MDMK Vaiko MP seat