நேற்று ஜம்முவில் நடந்த சம்பவம்.! உச்சகட்ட கொந்தளிப்பில் பிரதமர் மோடி.! குறிவைக்கப்படும் பாஜக.! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாஜகவை சேர்ந்த மூன்று தொண்டர்களை பயங்கரவாதிகள் நேற்று சுட்டுப் படுகொலை செய்துள்ளனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பாஜகவை சேர்ந்த ஃபிதா ஹுசேன், உமா் ஹஜாம் மற்றும் உமா் ரஷீத் ஆகிய 3 பேரையும் நேற்று பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில், மூன்று பேரின் உடலிலும் துப்பாக்கி கொண்டு பாய்ந்தது.

பலத்த காயமடைந்த அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய, டிஆா்எப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற ஒரு தாக்குதல் நடத்துவோம் என்று அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில்தான் இந்தப் படுகொலை அரங்கேறி உள்ளது. கடந்த ஜூன் மாதத்திலிருந்து பாஜக தொண்டர்கள், தலைவர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் பாஜகவை 8 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கம் மூலமாக கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், "மூன்று இளம் கட்சித் தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்" என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp 3 members killed in kashmir


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->