பீகார் : பூரண மதுவிலக்கால் அதிரடியில் போலீசார்., சிக்கிய வெளிநாட்டு மது பாட்டில்கள்.!  - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு நடைமுறையில் உள்ளது. கடும் சவால்களுக்கு இடையே பீகார் மாநில முதலமைச்சர் பூரண மதுவிலக்கை அமல்படுத்தி வருகிறார். என்ன நிலைமை ஆனாலும் நான் மதுவிலக்கு கொள்கையில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று உறுதி பூண்டுள்ளார்.

அதே சமயத்தில் பூரண மதுவிலக்கு காரணமாக பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்களை விற்பனை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். மேலும், அதிரடி நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

அப்படியாக அண்டை மாநிலங்களிலிருந்து மதுபானங்களை கடத்தி வருவதை தடுப்பதற்காக தீவிர வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து பீகார் மாநிலத்திற்கு வந்த அரசு பேருந்தில் வெளிநாட்டு மதுபானங்களை கடத்தி வந்த பேருந்தின் ஓட்டுநர் உள்ளிட்ட 6 பேர் பிடிபட்டு உள்ளனர். லக்னோவில் லக்னோவில் இருந்து புறப்பட்ட அந்த பேருந்து முசாபர் நகரை அடைந்ததும், அந்த பெருந்ததி கலால் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் 194 வெளிநாட்டு மதுபாட்டில்கள் அந்த பேருந்தில் இருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து மது பாட்டில்களை பறிமுதல் செய்ததுடன், அதனை கடத்தி வந்த பேருந்தின் ஓட்டுநர் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bihar police arrest bus driver


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->