ஒரு ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., செய்யும் வேலையா இது? வைரல் ஆகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆளுங்கட்சியை சேர்ந்த எம்எல்ஏ ஒருவர், நடன பெண்மணியுடன் கைகோர்த்து நடனம் ஆடிய சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. 

மேலும் அந்த நடன பெண்களுடன் ஆளுங்கட்சி எம்எல்ஏ பணத்தை வீசி நடனம் ஆடிய அந்த வீடியோ காட்சி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆளுங்கட்சியாக உள்ள ஐக்கிய ஜனதா தள கட்சியின் எம்எல்ஏ கோபால் மண்டல் என்பவர், பாகல்பூர் அருகே நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று இருந்தார்.

அப்போது அந்த திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்ற நடன நிகழ்ச்சியில், நடன பெண்ணுடன் சேர்ந்து உற்சாகமாக எம்எல்ஏ நடனம் ஆடினார். 

மேலும் நடன பெனின் கைகளை பிடித்துக் கொண்டும் எம்எல்ஏ நடனமாடினார். இது குறித்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் எம்எல்ஏவின் இந்த செயல் குறித்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bihar MLA dance with lady dancer


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->