முக்கிய தலைவர்கள் தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு.. பரபரப்பில் 2-கட்ட தேர்தல்.!! - Seithipunal
Seithipunal


243 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு 3 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலை முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ஜனதா கூட்டணி ஒரு அணியாகவும், ராஷ்டிரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மெகா கூட்டணியை அமைத்து தேர்தலை சந்திக்கின்றனர். 

முதல் கட்ட தேர்தல் கடந்த 28ஆம் தேதி 71 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளது. 17 மாவட்டங்களை உள்ளடக்கிய 94 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறும். இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 

இந்த தொகுதிகளில் 2 கோடியே 85 லட்சத்து 50 ஆயிரத்து 285 வாக்காளர்கள் உள்ளனர். மேலும், 41 ஆயிரத்து 362 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. மொத்தமாக 1463 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ராஷ்டிரீய ஜனதா தளத்தின் முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ், அவருடைய அண்ணன் தேஜ்பிரதாப் யாதவ், சத்ருகன் சின்காவின் மகன் லவ் சின்கா ஆகியோரின் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

முதலமைச்சர் நிதிஷ் குமாரின் சொந்த கிராமத்திலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் நடக்கும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முக கவசம், சமூக இடைவெளி, கிருமி நாசனி, வாக்காளர்கள் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் கையுறை வழங்குதல் உள்ளிட்ட, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bihar election phase 2 voting


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->