அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் ஆப்பு.! கொண்டாட்டத்தில் தமிழக மக்கள்.!! - Seithipunal
Seithipunal


17 வது மக்களைவை தேர்தலுக்கான தேர்தல் தேதிகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அரசியல் கட்சிகள் கூட்டணி, வேட்பாளர், தொகுதி பங்கீடு, பிரச்சாரம் என்று தீவிரமாக காலத்தில் இறங்கியுள்ளனர். 

இதேபோல், வாக்குசாவடிகளாக பயன்பட்டு வரும் பள்ளிகளில் தேர்வுகள் நடக்காமல் இருக்க முன்னதாகவே தேர்வுகள் நடத்த அணைத்து மாநிலங்களும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. நாடு முழுவதும் சுமார் 10 இலட்சம் வாக்கு சாவடிகள் தயாராகி வருகின்றன.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி, ஒரேகட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல், தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் 50 ஆயிரம் ரூபாய் மற்றும் அதற்கு மேல் பணம் எடுத்து செல்ல உரிய ஆவணம் கையில் இருக்க வேண்டும் போன்ற விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்களுக்கு கட்அவுட், பிளக்ஸ் பேனர்கள் வைக்க தடை விதித்து உயர்நிதீமன்ற மதுரை கிளை உத்தரவு பிரப்பித்துள்ளது. நீதிமன்றம் அளித்துள்ள அந்த உத்தரவில், 

* பொதுக்கூட்டங்களுக்கு பொதுமக்களை கூட்டமாக அழைத்து வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

* தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்களுக்கு கட்அவுட், பிளக்ஸ் பேனர்கள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

சாலை ஓரங்களில் வைக்கப்படும் கட்அவுட், பிளக்ஸ் பேனர்களால் போது மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். தற்போது இந்த உத்தரவு பொது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் நிம்மதியான செய்தியாக இது உள்ளது.

அதே சமயத்தில் அரசியல் கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியான செய்து இதுவாகும். கட்-அவுட் இல்லா பிரச்சாரமா.. ஐயோ பாவம் அரசியல் கட்சிகளின் நிலை.
 

English Summary

BAN FLEX CUT OUT IN TN


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal