மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கருத்தால்!! திமுக-காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்ட சர்ச்சை!! - Seithipunal
Seithipunal


விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ராதாமணி சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததையடுத்து, அந்த தொகுதி காலியானதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலின் பொழுது விக்கிரவாண்டி தொகுதியில், திமுக சார்பில் ராதாமணி என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். உடல்நிலை சரியில்லாமல் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த சில தினங்களுக்கு முன் உயிரிழந்தார். இதனை அடுத்து அவருடைய தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்த வசந்தகுமார், தன்னுடைய நாங்குநேரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததால் அந்த தொகுதி ஏற்கனவே காலியானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இதனை அடுத்து தமிழகத்தில் தற்போது இரண்டு சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது. இரண்டு தொகுதிகளும் காலியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளதால், விரைவில் தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகிறது. 

இந்தநிலையில், விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளிலும், திமுகவே போட்டியிடலாம் என மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி கூறியுள்ளார்.  நாங்குநேரி தொகுதியை இதற்கு முன் காங்கிரஸ் வசம் இருந்த தொகுதியை
திமுகவே போட்டியிடலாம் என கம்யூ. மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியிருப்பது திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

balakrishnan speak about by election


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->