தமிழர்கள் போராடி பெற்ற ஜல்லிக்கட்டில் சாதி பிரச்சனை.! வேறு வழியின்றி நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு.!! - Seithipunal
Seithipunal


தமிழர்களின்  வீரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு போட்டி இந்த வருடம் பொங்கல் தினத்தை முன்னிட்டு பல ஊர்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பாக, மதுரையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய மூன்று இடங்களில் நடத்த அரசாணை வேலிடப்பட்டது.

இதில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தும் குழுவில் ஒரு பிரிவினரை (சாதியை) சேர்ந்தவர்கள் மட்டுமே உள்ளதாக, மற்றொரு பிரிவினர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் விசாரணையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை, மதுரை ஆட்சியர் தலைமையில் கமிட்டி அமைத்து நடத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரிந்துரை செய்தது. 

இன்று இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவில் இருதரப்பினிடையே கருத்து மோதல் இருப்பதால், ஜல்லிக்கட்டு குழுவை நீதிமன்றமே நிர்ணயிக்கும் என்றும்,  இருதரப்பினரிடையே ஒருமித்த கருத்து இல்லையெனில், அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டிற்கு தடை விதிக்கப்படும் என்றும் கூறிய நீதிபதிகள், இது சம்மந்தமாக மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் கண்காணிப்பாளர் அரைமணி நேரத்தில் ஆஜரகி விளக்கம் அளிக்க வேண்டும்' என  உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். 

இந்நிலையில், இந்த வழக்கில் சற்றுமுன் அளித்த தீர்ப்பின் படி, நீதிமன்றம் அமைக்கும் குழுவே அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்தும் என்றும், பிற்பகலில் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AVANIYAPURAM JALLIKATTU ISSUE CHENNA HC DIVISION NEW ORDER


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->