வாக்கு பதிவு செய்த புகைப்படத்தை பதிவு செய்த அட்லி.! கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்., அந்த அழகை உள்ளே சென்று பாருங்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவிற்கான பாராளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நாட்களில் இருந்து அரசியல் கட்சிகள் தங்களுக்கான கொள்கைகள் ஒத்துப்போக கூடிய கட்சிகளுடன் கூட்டணியை அமைத்து தீவிர பிரச்சாரத்திலும்., வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 39 மக்களவை தொகுதியில் நடைபெறும் தேர்தலில் மொத்தம் 840 நபர்கள் வேட்பாளர்களாகவும்., 18 தொகுதிக்குகளில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலில் சுமார் 277 நபர்கள் போட்டியிடுகின்றனர். தமிழகம் முழுவதும் சுமார் 67,720 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

நேற்று தமிழகம் முழுவதும் விறுவிறுப்பான வாக்குப்பதிவுகள் நடைபெற்று., காலை முதலாகவே திரையுலக பிரபலங்கள்., பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் வாக்குகளை செலுத்திய நிலையில்., தமிழகம் முழுவதும் சுமார் 70.90 விழுக்காடு வாக்குகள் பதிவானது. திரையுலகை சார்ந்த பிரபலங்கள் தங்களின் வாக்குகளை பதிவு செய்து அவர்களின் இணைய பக்கங்களில் பதிவு செய்து வந்தனர். 


அந்த வகையில்., பிரபல இயக்குனரான அட்லி தனது மனைவியுடன் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குகளை பதிவு செய்து ட்விட்டரில் புகைப்படத்தை பதிவு செய்யவே., இதனை கண்ட நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

atle vote for parliament election and post a picture twitter


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->