190 தொகுதிகளில் திமுக போட்டி.? கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிய தொகுதிகள்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் பல்வேறு வியூகங்களை வகுத்து தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறார். மேலும் எப்போதும் இல்லாத அளவிற்கு அசுர பலத்துடன் போட்டியிட வேண்டும் என திமுக விரும்புகிறது. 

இந்த முறை அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதில் திமுக உறுதியாக உள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 190 தொகுதிகளை திமுக போட்டியிட விரும்புவதாக கூறப்படுகிறது. மேலும், மதிமுக, விசிக, கொங்குநாடு மக்கள் கட்சி போன்றவற்றை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்க திமுக முடிவு செய்து உள்ளது. இதற்கு திமுக கூட்டணி கட்சிகளிடையே தீவிர பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஒரு சில காட்சிகள் இதற்கு சம்மதம் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது. 

தற்போது கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சி கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் 41 தொகுதிகளில் போட்டியிட்டது. அதே அளவு சீட்டை தற்போதும் காங்கிரஸ் கட்சி எதிர்பார்க்கிறது. ஆனால், திமுக தரப்பில்15 சீட்டு மட்டுமே தர முன்வந்துள்ளனர். அதிகபட்சமாக 18 சீட்டு வரை தர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

திமுக இந்த முறை மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம், கொங்குநாடு மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தலா 4 சீட்டும், பார்வார்டு பிளாக், வாழ்வுரிமை கட்சிக்கு தலா ஒரு சீட்டும் வழங்க முடிவு செய்துள்ளது. காங்கிரஸ், சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகளைத் தவிர மற்ற கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்க வேண்டும் என திமுக திட்டமிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

assembly election 190 seats for dmk


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->