பாஜக மூத்த தலைவரின் உடல்நிலை கவலைக்கிடம்? - Seithipunal
Seithipunal


முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜகவின் மூத்த மூத்த தலைவருமான அருண் ஜெட்லி உடல்நிலை குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆகஸ்ட் 9-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

கடந்த ஆட்சியின் போது மோடி தலைமையிலான அரசில் மத்திய நிதி அமைச்சராக பணியாற்றியவர் அருண் ஜெட்லி. கடந்த ஆண்டு ஆட்சி முடியும் தருவாயில் அடிக்கடி உடல்நிலை குறைவால் அவர் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வந்தார். கடைசி பட்ஜெட்டை கூட அவரால் தாக்கல் செய்ய முடியவில்லை. 

arun jeatiley, அருண் ஜெட்லீ, பாஜக அருண் ஜெட்லீ,

இந்நிலையில் இதயத்துடிப்பு சீராக இல்லாததாலும், சுவாசப் பிரச்னை காரணமாகவும் மருத்துவமனையில் அருண் ஜெட்லி அனுமதிக்கப்பட்டார். சிறுநீரகத்துக்கான சிறப்பு மருத்துவர், இதயநோய் நிபுணர் உள்ளிட்டோர் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

இந்நிலையில், அருண் ஜேட்லியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பில் தகவல்கள் வெளியிட்டுள்ளது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், இணை அமைச்சர் அஸ்வினி குமார் உள்ளிட்டோர் இன்று காலைமருத்துவமனைக்குச் சென்று அருண் ஜேட்லியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்து வந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

arun jaitley is sick


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->