நீதிமன்றத்தில் திக் திக் நிமிடங்கள்.. ஆளும் கட்சி எம்.எல்.ஏக்கு எதிரான வழக்கில் திடுக்கிடும் திருப்பம் - வெளியான பரபரப்பு தகவல்.! - Seithipunal
Seithipunal


அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதிக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், “கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி கட்சிப் பொதுக்கூட்டத்தில் பேசியபோது, சபாநாயகர், கொறடா ஆகியோருக்கு எதிராக மிரட்டும் வகையில் பேசியதாக வழக்கறிஞர் பாலமுருகன் என்பவர் கொடுத்த புகாரின்அடிப்படையில் என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட் டுள்ளது.

தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கும்நிலையில், என்னைக் கைது செய்வதற்கான வாய்ப்புள் ளது. என் மீது எந்த வழக்கும் நிலுவையில் இல்லை. எனவே,சபாநாயகரை மிரட்டும் விதமாக பேசியதாக என் மீதுதொடரப்பட்ட வழக்கில், முன் ஜாமீன் வழங்க வேண்டும்”எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில், சட்டமன்ற உறுப்பினர் இரத்தினசபாபதியை விசாரிக்க வேண்டியுள்ளதால், அவருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது.

பொதுக்கூட்டத்தில் சபாநாயகர், கொறடாவை மிரட்டும் வகையில் பேசியுள்ளார். ஆகவே விசாரிப்பது அவசியம் எனத் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து நீதிபதி, புகார் அளித்தவரும், குற்றம்சாட்டப்பட்டவரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள். இவர்கள்எப்போது வேண்டுமானாலும் ஒன்று சேருவார்கள்.

ஆகவே கைது செய்ய வேண்டிய அவசியமில்லை. எனக்கூறி விசாரணை அதிகாரி விசாரணைக்காக அழைத்தால் வர வேண்டுமென்ற நிபந்தனையுடன், முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aranthangi-MLA-rathina-sabapathy case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->