அம்பலமான உண்மை : அந்த அமைச்சர் மீது எப்போது நடவடிக்கை எடுப்பீர்? அண்ணாமலை சரமாரி கேள்வி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவுபடி, வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகம் முழுவதும் வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் வழிபடுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று, பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். 

கோவை பொன்னைய்யராஜபுரம் பகுதியில் நேற்று பாஜக சார்பில் நடைபெற்ற நமோ பொங்கல் விழாவில் கலந்து கொண்ட, அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில்,

"கொரோனா நோய் பரவல் அதிகமாக இருக்கும் மாநிலங்களில் கூட வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தளங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், தமிழகத்தில் தைப்பூச விழாவுக்கு கூட பொதுமக்கள் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

சமூக இடைவெளியுடன் வழிபாட்டுத் தலங்களுக்கு தமிழக மக்களால் சென்று வழிபட முடியும். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு வெள்ளி, சனி ஞாயிற்றுக் கிழமைகளில் பக்தர்கள் வழிபட்டு தலங்களுக்கு செல்வதற்கு அனுமதி வழங்குவது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும்.

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் எந்த தவறும் நடக்கவில்லை என்று சொன்னவர்கள் தான்., தற்போது தவறு நடந்துள்ளது என்றும், நடவடிக்கை எடுப்போம் என்றும் சொல்கின்றனர். இதற்கு காரணமான அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்?" என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

annamalai say about pongal gift issue cm statement


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->