#BigBreaking:: ஈரோடு கிழக்கில் பாஜக போட்டி...? பலம் வாய்ந்த வேட்பாளர் வேண்டும்... அண்ணாமலையின் சூசகம்..!! - Seithipunal
Seithipunal


அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தனது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்காமல் உள்ளது. அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி அணியை சார்ந்த மூத்த நிர்வாகிகள் அண்ணாமலை சந்தித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அதேபோன்று பன்னீர்செல்வம் தலைமையிலான நிர்வாகிகளும் அண்ணாமலையை சந்தித்து பேசி இருந்தனர்.

 இதனை அடுத்துதமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்சியின் மேல் இடத்திற்கு தகவல் அளித்துள்ளதாகவும் அவர்கள் எடுக்கும் முடிவே தனது நிலைப்பாடு எனவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது "தேர்தல் கூட்டணிக்கு என மரபு மற்றும் தர்மம் இருக்கிறது. இடைத்தேர்தல் எல்லாம் கட்சியின் பலம் மற்றும் வளர்ச்சியை பார்க்க கூடிய அளவுகோல் இல்லை.

திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து நிற்கக்கூடிய கட்சி பலம் வாய்ந்த கட்சியாக இருக்க வேண்டும். அவர்களை எதிர்த்து நிற்கக்கூடிய வேட்பாளர் மக்களிடம் நல்ல அறிமுகமாக இருக்க வேண்டும். இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியினர் பணத்தை தண்ணீர் போல செலவு செய்வார்கள். ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை 3 திமுக அமைச்சர்கள் உள்ள மாவட்டம். இதை பார்க்கும் பொழுது எந்த அளவுக்கு பணம் செலவு செய்வார்கள் என்பது பார்க்க முடிகிறது.

அவ்வாறு இருக்கும் பொழுது ஒரு அணியாக நாம் கூட்டணி சார்பில் இருக்கக்கூடிய வேட்பாளருக்கு முழு வெற்றியும் கிடைக்கக்கூடிய வாய்ப்பாக இருக்க வேண்டும். எங்கள் கூட்டணியில் பெரிய கட்சி என்பது அதிமுக மட்டும் தான். அதிமுக தரப்பில் ஓபிஎஸ் அவர்களும் பேசியுள்ளார். இடைத்தேர்தலில் நிற்கக்கூடிய வேட்பாளர் தகுதி வாய்ந்தவராக இருக்க வேண்டும். திமுக தலைமையிலான கூட்டணியை எதிர்க்கும் பலம் வாய்ந்த ஒரே வேட்பாளராக இடைத்தேர்தலில் நிற்க வேண்டும்.

அவர் பின்னால் அனைத்து எதிர்கட்சிகளும் அணி திரண்டு இருக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு" என செய்தியாளர்களை சந்திப்பில் அண்ணாமலை பேசியுள்ளார். இதன் மூலம் பாஜக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்பது உறுதியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai said strong candidate against the Congress dmk


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->