வீடியோ விவகாரம்... அரசியலை விட்டு விலக தயார்... எ.வ வேலுவுக்கு அண்ணாமலை சவால்...!! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கேட் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். திமுக ஆட்சி பொறுப்பேற்று 20 மாதங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் மக்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் திமுக உள்ளது.

இதனால் திமுக தன் வசம் உள்ள ஆட்சி அதிகாரம் மற்றும் பண பலத்தை பயன்படுத்தி எல்லா வகையிலும் வெற்றி பெற முயலும் என பாஜக குற்றம் சாட்டி வருகிறது.

அதனை மெய்ப்பிக்கும் விதமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது திமுக அமைச்சர் கே.என் நேரு மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனிடம் பேசியது அருகில் இந்த மைக்கில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோவை அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பண பட்டுவாடா குறித்து பேசியதாக கூறி வெளியிட்டிருந்தார். 

இதற்கு திமுக அமைச்சர் எ.வ வேலு மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது "எதிர்வரும் நாட்களில் திமுகவின் கூட்டணி கட்சி தலைவர்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதால் அவர்கள் தேவையான ஏற்பாடுகள் செய்வது குறித்து இருவரும் பேசியுள்ளனர். அதனை எதிர்க்கட்சிகள் எடிட் செய்து வெளியிட்டுள்ளனர்" என அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தார்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலையிடம் அமைச்சர் எ.வ வேலு அளித்த விளக்கம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அண்ணாமலை "திமுக அமைச்சர் எ.வ வேலு கூறும் இடத்தில் ஒரிஜினல் வீடியோவை நாங்கள் தருகிறோம்.  வீடியோ எடிட் செய்ததாக அமைச்சர் எ.வ வேலு நிருபித்தால் அரசியலை விட்டு விலக நான் தயார். மாநிலத் தேர்தல் ஆணையரிடம் இந்த வீடியோவை ஒப்படைக்க உள்ளோம்" என செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai challenged ready to quit politics if proven video was false


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->