ஆந்திர அமைச்சரவையில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் புதிய புரட்சி! ஆச்சரியமான அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


அண்மையில் நடைபெற்ற முடிந்த ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான YSR காங்கிரஸ் கட்சி 175 இடங்களில் 151 இடங்களை கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றது.  இதனை எடுத்து ஜெகன்மோகன் ரெட்டி மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். 

தற்பொழுது அவர் தன்னுடைய அமைச்சரவையை முடிவு செய்யும் பணியில் இருக்கிறார். இந்நிலையில் அவருடைய அமைச்சரவையில் 5 துணை முதலமைச்சர் இடம் பெறலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆந்திராவில் உள்ள அனைத்து சமுதாயங்களும் பிரதிநிதித்துவம் பெறும் வகையில், ஒரு சமுதாயத்திற்கு ஒருவர் என ஐந்து பேரை, துணை முதலமைச்சராக நியமிக்க ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

இதன்மூலம் புறக்கணிக்கப்பட்டதாக எழும் விமர்சனங்கள் தவிர்க்கப்படும் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

andhra cm ysr jagan mogan reddy decided 5 deputy cm for andhra


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->