கட்சிகளை மட்டுமே அழைத்த மத்திய அரசு, அன்புமணியை மட்டும் அழைத்ததன் பின்னணி!  - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் முன்னாள் மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரும் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாசிடம்  ஆலோசனை நடத்தியுள்ளார். 

சுதந்திர இந்தியாவின் சுகாதாரத்துறை அமைச்சர்களில் மிகச் சிறந்த செயல்பாட்டை கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் என பாராட்டப் பெற்ற அன்புமணிக்கு இந்த துறையில் அதிக அனுபவம் இருக்கும் என்ற அடிப்படையில் அவரிடம் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. 

மேலும் இந்தியாவில் கொரோனா என்று நுழைந்ததோ அன்று முதலே என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும், எவ்வாறு செயல்பட வேண்டும்? எப்பொழுது என்ன அறிவிப்புகள் அறிவிக்கப்பட வேண்டும்? எந்த மாதிரியான சோதனைகள் நடத்தப்பட வேண்டும்? யார் யாரெல்லாம் எவ்வாறு செயல்பட வேண்டும் என ஆலோசனைகளை அறிக்கைகள் மூலமாகவும், பேட்டிகள் ஆகவும் அன்புமணி ராமதாஸ் தந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய மருத்துவர்கள் மாநாட்டினை தலைமை ஏற்று நடத்திய பெருமையும் அன்புமணிக்கு இருக்கும் நிலையில், இந்தியாவில் போலியோ நோய் அவர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது தான் முழுமையாக ஒழிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவருடைய அனுபவத்தை பயன்படுத்தும் வகையில் அவரிடம் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

வருகின்ற ஏப்ரல் 8 ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தினை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கூட்டியுள்ளது. நாடாளுமன்றத்தில் 5 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துள்ள கட்சிகளின் தலைவர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். அதன்படி தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகளுக்கு அழைப்புகள் வந்த நிலையில், தமிழகத்தில் ஒரே ஒரு எம்பி மட்டுமே வைத்து உள்ள பாமகவின்  அன்புமணி ராமதாசை பிரதமர்  அழைத்து பேசி இருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

மேலும் அவரிடம் நாட்டிற்கு தேவையான ஆரோக்யமான ஆலோசனைகளை வழங்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி வலியுறுத்தி இருக்கிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.  அன்புமணியின் ஆலோசனைகள் வரும் ஏப்ரல் 8ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் பேசப் படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பிரதமர் மோடி அன்புமணியிடம் பேசிய தகவலை அன்புமணி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். "மாண்புமிகு பாரதப் பிரதமர் இன்று மாலை தொலைபேசி மூலம் என்னை தொடர்பு கொண்டு கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு குறித்து ஆலோசித்தார். இந்த சிக்கலில் சிறப்பான தலைமைப் பண்பை வெளிப்படுத்தியதற்காக எனது பாராட்டுகளை அவருக்கு தெரிவித்தேன். கொரோனா பரவல் முழுமையாக தடுக்கப்படும் வரை ஊரடங்கை நீட்டிக்கும்படி  பிரதமரை கேட்டுக் கொண்டேன்.  இதுகுறித்த கூடுதல் யோசனைகளை எழுத்து வடிவில் பிரதமர் கோரினார். அவை விரைவில் வழங்கப்படும். உலக அளவில் கொரோனாவுக்கு எதிரான போரில் அனைவரும் ஒன்றிணைவோம்!" என பதிவிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

anbumani tweet about modi calling


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->