பிறரின் திட்டத்தை தாங்கள் செய்ததாக கூறுவதில் அவர்கள் பிஎச்டி முடித்துள்ளனர் - அன்புமணி இராமதாஸ் நறுக் பதில்.! - Seithipunal
Seithipunal


தர்மபுரி-காவிரி உபரி நீர் திட்டத்தினை நிறைவேற்ற வலியுறுத்தி மூன்று நாள் நடைபயண பிரச்சாரத்தினை மேற்கொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இன்று மூன்றாம் நாள் பிரசாரத்தினை தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூரில் தொடங்கினார். 

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், 'தருமபுரி காவேரி உபரிநீர் திட்டத்தினை நிறைவேற்ற முதலமைச்சர் உறுதி அளித்ததாக திமுகவினர் போஸ்டர் அடித்தது' பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அன்புமணி, "திமுகவினருக்கு பிறரின் திட்டத்தை, அறிவிப்பை தாங்கள் செய்ததாக கூறுவது எளிது. இதில் அவர்கள் பிஎச்டி முடித்துள்ளனர். எங்களுக்கு அது நோக்கம் இல்லை. முதல்வர் அறிவிக்கட்டும், அதனை நடைமுறைப்படுத்தட்டும். 

இது கட்சி சார்பற்ற நிகழ்வு. தருமபுரி மாவட்டத்துக்கு நீண்ட கால பிரச்சனை. தமிழகத்திலேயே மிகக்குறைந்த மழையளவு கொண்ட மாவட்டம், ஆனால் மேற்கு எல்லையில் காவேரி & வடக்கு எல்லையில் தென்பெண்ணை என 2 ஆறுகள் செல்கிறது. ஆனால், இங்குள்ள மக்களுக்கு உபயோகம் செய்ய நீர் இல்லை. இது மிகப்பெரிய கொடுமை. அப்படியென்ன கொடுமை செய்தார்கள் இங்குள்ள மக்கள்?

உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கிவிட்டது. 30 - 40 ஆண்டுகள் பின் வெயிலால் ஏற்படும் பாதிப்புகள் வரலாம் என கணிக்கப்பட்டது. 

ஆனால், அது இன்றே வந்துவிட்டது. அமெரிக்கா, ஐரோப்பா என வளர்ந்த நாடுகள் எங்கும் வறட்சி. குடிக்க நீரில்லை. தொழிற்சாலை, கார் என பல விஷயங்களை வைத்துள்ளவர்கள் தண்ணீரை தேடிக்கொண்டு இருக்கிறார்கள். எங்கும் தண்ணீர் இல்லை. நமக்கு வரும் நீரை மிச்சம் செய்வதே தொலைநோக்கு பார்வை. 

இவர்களின் தொலைநோக்கு பார்வை என்பது அடுத்த தேர்தலுக்கு என்ன இலவசம் கொடுக்கலாம் என்பதுதான். அடுத்த தலைமுறைக்கு, அடுத்த 50 ஆண்டுகளுக்கு திட்டமிட வேண்டும். எங்களின் பார்வையும் அதுதான். இதுவே நல்ல நிர்வாகம். 

இந்த திட்டத்தை பொறுத்தவரையில் அரசியல், ஜாதி, மத, இனம், மொழி சார்பற்ற பிரச்சாரம் செய்து வருகிறோம். தருமபுரி மாவட்டத்தின் உயிர்நாடி பிரச்சனை. தமிழ்நாடு முதல்வர் உடனடியாக அறிவிப்பு வெளியிட்டு திட்டத்தை செயற்படுத்த வேண்டும். அரசு அவ்வாறு திட்டத்தை செயல்படுத்தாத பட்சத்தில் அதற்கான விளைவுகளை சந்திப்பார்கள்" என்று அன்புமணி இராமதாஸ் பதிலளித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anbumani Ramadoss Say About DMK Members fake poster


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->