அதிரடி திட்டத்துடன் மீண்டும் தருமபுரியில் களமிறங்கிய அன்புமணி! - Seithipunal
Seithipunal


கடந்த 2014 - 2019 வரை தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அன்புமணி ராமதாஸ், 2014 தேர்தலின் போட்டியிட்டபோது நின்று போன தர்மபுரி மொரப்பூர் ரயில் திட்டம் கொண்டு வருவேன் என்று வாக்குறுதி அளித்திருந்தார். 

அதன்படி  தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற பிறகு ரயில்வே அமைச்சர்களாக இருந்த சதானந்தகவுடா, சுரேஷ் பிரபு, பியூஸ் கோயல் என அனைத்து அமைச்சர்களையும் இடைவிடாது சந்தித்து கோரிக்கை வைத்திருந்தார்.

அதற்கு பலனாக கடந்த வருடம் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் தமிழகம், கேரளா, பாண்டிச்சேரி அடங்கிய ரயில்வே மண்டலத்தில் அறிவிக்கப்பட்ட ஒரே ஒரு புதிய திட்டம் தருமபுரி, மொரப்பூர் திட்டம் தான். 

அதன் பிறகு திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டு செயல்பாட்டுக்கு வராமல் இருந்த நிலையில்  இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளதாக தெரிவித்த அவர், அதற்கான அரசு ஆணையுடன் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி தர்மபுரி மக்களை அன்புமணி சந்தித்து இந்த தகவலை தெரிவித்து மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். 

அதன்படி, தருமபுரி-மொரப்பூர் இடையே 36 கிலோ மீட்டர், ரூபாய் 350 கோடி மதிப்பில் தொடர்வண்டி திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழா மார்ச் 4 ஆம் தேதி  தருமபுரி வள்ளுவர் மைதானத்தில் நடந்தது. இந்த திட்டத்தினை அப்போதைய மத்திய தொடர்வண்டி துறை அமைச்சர் பியூஷ் கோயல் அவர்கள் அடிகள் நாட்டி தொடக்கி வைத்தார். 

இந்த விழாவில் பாமக இளைஞரணி தலைவரும், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களும், தமிழக அமைச்சர் கே.பி அன்பழகன்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இந்த திட்டத்துக்காக கடந்த 5 ஆண்டுகளில், மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு, சதானந்த கௌடா. பியூஸ் கோயல் மூவரையும் 18 முறை அன்புமணி இராமதாஸ் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், மொரப்பூர்-தருமபுரி இரயில்வே இணைப்புத்திட்ட செயல்பாடுகள் இன்று மொரப்பூரில் இரயில்வே அதிகாரியுடன் இணைந்து ஆய்வு செய்த அன்புமணி எஞ்சிய பணிகளை விரைவில் முடித்து தருமபுரி மாவட்ட மக்களின் பயன்பாட்டிற்கு இத்திட்டம் வர ஆவண செய்யுமாறு, இரயில்வே துறை, தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொண்டார். 

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தர்மபுரி மக்களவை தொகுதியில் அன்புமணி தேல்வி அடைந்தாலும் அவரது அயராத முயற்சியால் தர்மபுரி மக்களின் நீண்ட ஆண்டு கனவான மொரப்பூர்-தருமபுரி இரயில்வே இணைப்புத் திட்டத்துக்கு இன்று வரை போராடிவருவது அந்த தொகுதி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

anbumani ramadoss in dharmapuri


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->