பொறுத்து பார்த்த அன்புமணி எடுத்த முடிவால், முக ஸ்டாலினுக்கு பறந்த நோட்டிஸ்! பரபரப்பான அரசியல் களம்! - Seithipunal
Seithipunal


வருகின்ற மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம்  தமிழகமெங்கும் சூடுபிடித்து உள்ளது. பிரச்சாரம் ஆரம்பித்த முதல் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு க ஸ்டாலின் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இருவரையும் கடுமையாக கொச்சைச் சொற்களாக, தகாத வார்த்தைகளாலும் விமர்சித்து வந்திருந்தார். 

குறிப்பாக வடமாவட்டங்களில் பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்த முக ஸ்டாலின் மேலும் வட மாவட்டங்களில் திமுக அதிகபடியான தொகுதிகளில் நிற்பதால் வன்னியர் வாக்காளர்களை கவர்வதற்காக வன்னியர் அறக்கட்டளை மீதான ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை டாக்டர் ராமதாஸ் மீதும், அன்புமணியும் மீதும் தெரிவித்து இருந்தார். இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த டாக்டர் ராமதாஸ் மு க ஸ்டாலின் கூறுவதெல்லாம் பவானி ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என்று விளக்கம் அளித்திருந்தார். 

மேலும் தொடர்ந்து மு க ஸ்டாலின் இது குறித்து பேசி வருவதால் பொறுத்து பொறுத்து பார்த்த அன்புமணி இன்று பொங்கி எழுந்து, தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாஹுவிடம், வன்னியர் அறக்கட்டளை குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பி வருவதாக மு க ஸ்டாலின் மீது அன்புமணி புகார் ஒன்றை அளித்துள்ளார். இந்த புகாரினை அன்புமணி ராமதாஸின் சார்பாக பாமக வழக்கறிஞர் பாலு தேர்தல் ஆணையத்தில் அளித்தார். 

மேலும் இதனை அடுத்து பேசிய வழக்கறிஞர் பாலு தொடர்ந்த அவதூறு செய்திகளை வெளியிட்டு வரும் ஸ்டாலின் இந்த விவகாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும், மேலும் இதே போல மத்திய சென்னை  பாமக வேட்பாளர் டாக்டர் சாம்பால் குறித்து தவறான மார்பிங் செய்யப்பட்ட பொய் செய்திகளை திமுக வேட்பாளர் உதவியாளர்கள் மூலம் சமூக வலைத்தளத்தில் பரப்பியது குறித்து அளிக்கப்பட்ட புகாரில் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். 

முக ஸ்டாலின் மீது ஏற்கனவே முதல்வர், அமைச்சர் எஸ்பி வேலுமணி அவதூறு வழக்குகளை தொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

anbumani mp file case against mk stalin in election commission


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->