அதிமுக, பாமக வேட்பாளர்கள் சேர்ந்து செய்த காரியம்., கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சட்டமன்றத்தின் பலத்தின்படி திமுக அணிக்கு 3 இடங்களும் அதிமுக அணிக்கு 3 இடங்களும் கிடைப்பது உறுதியாகி உள்ளது. இதனால் இந்த தேர்தல் நடைபெறாமல் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

திமுக சார்பில் போட்டியிடும், அந்த கட்சியின் தொழிற்சங்கத் தலைவர் சண்முகம், திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் ஏற்கனவே வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இந்தநிலையில், அதிமுக சார்பில் முஹம்மது ஜான் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவார்கள் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் நேற்று முன்தினம் கூட்டாக அறிவித்தனர்  .
 
அதிமுகவின் இன்னொரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது, பாமக சார்பில் முன்னாள் மத்திய சுகதரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அறிவித்தார்.

இதனையடுத்து, மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கலின் கால அவகாசம் இன்று முடியும் நிலையில் கடைசி நாளான இன்று, அ.தி.மு.க. வேட்பாளர்கள் முகமது ஜான், சந்திரசேகரன் மற்றும் பா.ம.க. வேட்பாளர் அன்புமணி ராமதாஸ்ஆகியோர் இன்று தங்களது வேட்பு மனுவை முதலமைச்சர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் முன்னிலையில் தாக்கல் செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

anbumani filing his nomination


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->