மறைமுக தேர்தலில் தலைவர் பதவிகளை கைப்பற்றிய அமமுக.! உற்சாகத்தில் டிடிவி. தினகரன்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மூன்று ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த உள்ளாட்சித் தேர்தல் சமீபத்தில் 27 மாவட்டங்களுக்கு மட்டும் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்ட தேர்தல் கடந்த 27ஆம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் கடந்த 30ஆம் தேதியும் நடைபெற்றது. 

அப்போது பதிவான வாக்குகள் அனைத்தும் இம்மாதம் 2ஆம் தேதி மற்றும் 3ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாவட்ட ஊராட்சி தலைவர், மாவட்ட ஊராட்சி துணை தலைவர், ஒன்றிய ஊராட்சி தலைவர், ஒன்றிய ஊராட்சி துணை தலைவர் மற்றும் ஊராட்சித் துணை தலைவர் போன்ற பகுதிகளுக்கு மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. 

இந்த மறைமுக தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு மற்றும் திமுக கூட்டணியை முன்னணி இடங்களுக்கு போட்டியிடும் வேலையில் அமமுக கட்சியை இரு ஊராட்சி ஒன்றியங்கள் கைப்பற்றியுள்ளது. அதில் ஒன்று தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்தின் தலைவராக அமமுக கட்சியை சார்ந்த மாணிக்கராஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

மேலும் சிவகங்கை மாவட்டம் கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியத் தலைவராக அமமுகவை சார்ந்தவர்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியத் துணை தலைவராக அமமுகவை சார்ந்தவர்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ammk win kayatharu and kannangudi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->