அமமுகவினரை ஸ்கெட்ச் போட்டு தூக்கும் எடப்பாடி பழனிச்சாமி.. மாஸ் சம்பவம்..! - Seithipunal
Seithipunal


அமமுக மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனர். 

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அமமுக செயலாளர் பொன். ராஜா, சென்னை மத்திய மாவட்ட அமமுக செயலாளர் சந்தான கிருஷ்ணன், வடசென்னை மத்திய மாவட்ட அமமுக செயலாளர் லட்சுமி நாராயணனன் ஆகியோர் அதிமுக இணை ஓருருங்கிணைப்பாளர் மற்றும் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நேரில் சந்தித்து பேசினார். 

பின்னர், தாங்கள் அனைவரும் தவறினை உணர்ந்து மனம் திருந்தி அதிமுகவில் இணைய வந்திருப்பதாக தெரிவிக்கவே, எடப்பாடி பழனிசாமியும் அவர்களை இன்முகத்தோடு அதிமுகவில் இணைத்துக்கொண்டார். 

இவர்கள் அனைவரும் சேலம் நெடுஞ்சாலையில் நகரில் இருக்கும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்தில் தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டனர். அதிமுகவை கைப்பற்ற சசிகலா முயற்சிப்பதாக பல தகவல் வெளியாகி வரும் நிலையில், அமமுகவில் இருந்து பலரும் அதிமுகவில் இணைந்து வருவது டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AMMK Supporters Join AIADMK In front of Edappadi Palanisamy 28 June 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->