அமமுக நிர்வாகிக்கு அடித்த அதிஷ்டம்.. அதிரடி காட்டிய டிடிவி தினகரன்..!! - Seithipunal
Seithipunal


2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க, அனைத்து கட்சிகளும் தயாராகி வருகிறது. 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் அனைத்து கட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, அதிமுக மற்றும் திமுக, கட்சி பொறுப்புகளில் மாற்றம் செய்து வருகின்றனர். 

சமீபத்தில், அதிமுக தனது கட்சி நிர்வாகிகளை மாற்றம் செய்தனர். அதையடுத்து ஒவ்வொரு கட்சியாக நிர்வாகிகளுக்கு பொறுப்புகளை வழங்கி வருகின்றனர். 

இந்நிலையில், அமமுகவின் கடலூர் மத்திய மாவட்ட செயலாளராக ஆயில் பேட்டையை சேர்ந்த டாக்டர் பக்தரட்சகனை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நியமனம் செய்துள்ளார்.

பக்தரட்சகன் நெல்லிக்குப்பம், பட்டாம்பாக்கம், அண்ணாகிராமம், பண்ருட்டி, நெய்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அம்பேத்கார், அண்ணா, எம்ஜிஆர் சிலைக்கு தொண்டர்களுடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

நிகழ்ச்சியில் நகர செயலாளர்கள் பண்ருட்டி சக்திவேல், நெல்லிக்குப்பம் அப்துல் ரஷீத், நெய்வேலி ஜெயகுமார், ஒன்றிய செயலாளர்கள் வெங்கடேசன், பிரபாகரன், பெருமாள், கார்த்திகேயன், திருமலைவாசன், சார்பு அணி நிர்வாகிகள் மோகன்குமார், வாசுகி, ஜான்சிராணி, திராவிடன், தினகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ammk member new posting for ttv dinakaran


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->