அமமுகவில் இருந்து விலகப் போகும் முக்கிய நிர்வாகி.? காத்திருக்கும் கட்சி.. அதிர்ச்சியில் டிடிவி தினகரன்.!! - Seithipunal
Seithipunal


அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலதுகரமாக இருக்கும் முக்கிய நிர்வாகியை, தன்பக்கம் இழுக்க பாஜக அதற்கான வேலைகளை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, அந்த முக்கிய நிர்வாகி அதிமுகவில் இணைந்த காலத்திலிருந்தே சென்னையில் முக்கிய பிரபலமாக வலம் வந்து கொண்டுள்ளார். ஜெயலலிதா, சசிகலாவிற்கு நம்பிக்கைக்குரிய நபராக இருந்து வந்துள்ளார். சசிகலா சிறைக்கு சென்றதால் தற்போது தினகரனுக்கு வலதுகரமாக இருந்து வருகிறார். 

தினகரன் ஆர் கே நகர் தொகுதியில் வெற்றிபெற இவரும் காரணம் என கூறப்படுகிறது. தற்போது சசிகலா சிறையில் இருந்து வெளியே வர போகிறார். மேலும் அதிமுக  ஒன்றாக இணைய போகிறது என்றெல்லாம் செய்தி வந்த வண்ணம் உள்ளது. இதில் தமக்கு முழுமையாக உடன்பாடு இல்லை என்பதால், தினகரன் வலதுகரமாக இருந்த பிரபலம் தினகரன் தரப்பிடம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் பாஜக தரப்பு அந்த பிரபலத்தை பேச்சுவார்த்தை நடத்தி பாஜக பக்கம் இழுக்க முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் பாஜகவுக்கு பிடிகொடுக்காமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமமுகவினருக்கும் அவருக்கு சலசலப்பு நிலையை வருவதால், பாஜகவில் இணைய அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ammk member may be join bjp


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->