அ.ம.மு.கவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும், டி.டி.வி.தினகரன் தகவல்.! - Seithipunal
Seithipunal


தர்மபுரி மாவட்டம் அரூரில் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளை எல்லாம் ஒதுக்கி விட்டு ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தலை அறிவித்து இருப்பது, ஆளும் கட்சி தனது ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் உள்ளதாக அனைத்து அரசியல் கட்சிகளும் குற்றம் சாட்டுகின்றன.

இந்திய தேர்தல் ஆணையத்தில் அ.ம.மு.க. கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது நடைபேற உள்ள உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் ஒரே சின்னத்தில் அ.ம.மு.க போட்டியிடும். ஒரே சின்னத்தை ஒதுக்க கோரி நீதிமன்றத்தை நடுவோம். எங்களுக்கு நீதி தேவதை துணை இருக்கிறார். உள்ளாட்சி தேர்தல் குறித்து எதிர்க்கட்சிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் அ.ம.மு.க.வும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் என்றார்.

டிசம்பர் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் அறிவிக்கப்பட்ட தேர்தல் என்பது ஜோசியம் பார்த்து அதன்படி முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். நடந்து முடிந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க. பண பலத்தை வைத்து வெற்றி பெற்றது. மேலும், மத்திய அரசுக்கு இப்போது தான், இவர்கள் யார் என்பது புரிந்து கொண்டுள்ளனர். மத்தியில் ஆட்சி செய்பவர்கள் இவர்களை கைவிட்டால் நிச்சயம் தற்போதைய அதிமுக ஆட்சி நீடிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ammk may be case filed against local body election


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->