உள்ளாட்சி தேர்தல் : கடைசி நேரத்தில் திடீர் திருப்பம்! அமைச்சர் முன்னிலையில் முடிவெடுத்த வேட்பாளர்கள்!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கின்றது. டிசம்பர் 27-ஆம் தேதி முதல் கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கும் இடங்களில் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் முடிவடைய உள்ளது. 

இந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியை சேர்ந்த 6 ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர்கள் இன்று தமிழக அமைச்சர் தங்கமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்து உள்ளனர். திருச்செங்கோடு அருகே பள்ளிபாளையம் ஒன்றியத்தில் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் அமமுக வேட்பாளர்கள் 6 பேர் அக்கட்சியிலிருந்து விலகி மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி முன்னிலையில் அதிமுகவில் இன்று இணைந்துள்ளனர். 

உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் அமமுக வேட்பாளர்கள் அதிமுகவில் இணைந்தது தினகரனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ammk local body polls candidate joins admk in front of minister Thangamani


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->