அ.ம.மு.க-விலிருந்து விலகிய முக்கிய நிர்வாகி! தொடர் சோதனையில் தினகரன்!! - Seithipunal
Seithipunal


அமமுகவின் முக்கிய நிர்வாகிகளான தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் இசைக்கி சுப்பய்யா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு சென்று கொண்டிருக்கும் நிலையில், 

பல்வேறு நிர்வாகிகள் தொடர்ந்து வெளியேறி வரும் நிலையில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவுடன் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் சந்தித்து ஆலோசனை நடத்தினார் சுமார் இரண்டு மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில் அமமுகவில் இனி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சசிகலாவிடம் தினகரன் விவாதித்து விட்டு வந்தார்

இந்தநிலையில், அமமுக கட்சியின் தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் J. இஷிகா அவர்கள் துணை முதல்வர் திருஓ.பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் நேற்று  நேரில் சந்தித்து அ.ம.மு.க-விலிருந்து விலகி தாய் கழகமான அதிமுகவில் தன்னை அடிப்படை உறுப்பினராக இணைத்துக்கொண்டார்

தங்க தமிழ்ச்செல்வன் வெளியேறியதை தொடர்ந்து நாளுக்கு நாள் அமமுகவில் இருந்து பல்வேறு நிர்வாகிகள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ammk it wing secretary join in admk


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->