திமுகவுக்கு தாவிய அமமுக பிரமுகர்.! அதிர்ச்சியில் அமமுக, புலம்பும் அதிமுக.! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தமாக 28 வார்டுகள் உள்ளன. இதில் திமுக 14  வார்டுகளிலும், அதிமுக 10 வார்டுகளிலும், பாமக 2 வார்டுகளிலும், சுயேட்சை 1 , அமமுக 1 என்ற கணக்கிலும் வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக 14 இடங்களில் வெற்றி பெற்று இருந்தாலும் ஆளும்கட்சி அதிகாரத்தை பயன்படுத்தி சுயேட்சை, அமமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கவுன்சிலர்களான சாத்தனூர் முருகன், மேல்கரிப்பூர் முருகேசன் ஆகிய இருவரையும் தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்தனர்.

இதனை உணர்ந்த திமுக செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி, தண்டராம்பட்டு முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் மற்றும் நிர்வாகிகள், சுயேட்சை மற்றும் அமமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கவுன்சிலர்களான சாத்தனூர் முருகன், மேல்கரிப்பூர் முருகேசன் ஆகிய இருவரிடமும் பேசி திமுகவுக்கு அழைத்து வந்துள்ளனர். அவர்கள் கவுன்சிலர் தேர்தலில் செலவு செய்த லட்சக்கணக்கான தொகையை விட அதிக பணத்தனத்தை வழங்குவதாக திமுக பிரமுகர்கள் கூறியதாக கூறப்படுகிறது. இதை கேட்ட சுயேட்சை மற்றும் அமமுக உறுப்பினர்கள் திமுகவில் சேருவதற்கு முடிவு செய்தனர்.

இதையடுத்து, இரு கவுன்சிலர்களும் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு முன்னிலையில் திமுகவில் இணைந்துவிட்டனர். தற்போது திமுக கவுன்சிலர்கள் பலம் 16 ஆக உயர்ந்துள்ளது. இதனால் திமுகவை சேர்ந்தவர் சேர்மன் மற்றும் துணை சேர்மனாக வரும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்கிறார்கள் திமுகவினர்.

அமமுக பிரமுகர் திமுகவுக்கு தாவியது அமமுகவுக்கு அதிர்ச்சியை கொடுத்தாலும், ஆளும்கட்சியாக இருந்தும் நம்மால் அந்த அமமுக மற்றும் சுயேட்சை இரு கவுனசிலர்களை இழுக்க முடியவில்லையே என அதிமுகவினர் புலம்பி வருவதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ammk councillor join dmk in tvmalai district


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->